search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லணை கால்வாய்"

    தஞ்சை அருகே கல்லணை கால்வாயில் அடித்து செல்லப்பட்ட மாணவன் உடலை மீட்கக்கோரி உறவினர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    பூதலூர்:

    தஞ்சை மாவட்டம் பூதலூர் கல்லணை கால்வாயில் வில்வராயன்பட்டி கீழத் தெருவைச் சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவன் சிவாஜி(வயது 11) மற்றும் அவனது அண்ணன் சிவா (14) மற்றும் ஆனந்தராமன் ஆகியோர் நேற்று மாலை குளிக்க சென்றனர்.

    அப்போது ஆற்றில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் மாணவன் சிவாஜி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதில் சிவா(14) மற்றும ஆனந்த ராமன் ஆகியோர் தப்பித்தனர்.

    இது குறித்த தகவலின் பேரில் நேற்று மாலை திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு துறையினர் வந்து தேடினர். ஆனால் மாணவன் சிவாஜியை மீட்க இயலவில்லை. மேலும் இரவு நேரம் ஆனதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது.

    இதற்கிடையே நேற்று கல்லணை கால்வாயில் தண்ணீர் குறைவாக வந்து கொண்டிருந்தது. இன்று காலை முதல் அதிக அளவில் தண்ணீர் வருகிறது. இதனால் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிவாஜியின் உடலை தேடும் பணி பாதிக்கும் என்பதை அறிந்த அவருடைய தந்தை மோகன், தாய் உமா மற்றும் உறவினர்கள் பூதலூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் எதிரில் திருக்காட்டுப்பள்ளி -செங்கிப்பட்டி சாலையில் அமாந்து இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் திருக்காட்டுப்பள்ளி-செங்கிப்பட்டி இடையே போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

    கால்வாயில் முழுவதும் தண்ணீரை நிறுத்தி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிவாஜியின் உடலை மீட்க வேண்டும் என்று சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கூறினர்.

    இதுப்பற்றி தகவல் அறிந்ததும் பூதலூர் போலீசார் சாலை மறியல் நடைபெற்ற இடத்திற்கு வந்தனர். அப்போது பொதுப் பணித்துறை அதிகாரிகளிடம் பேசி தண்ணீரை நிறுத்தி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிவாஜின் உடல் தேடப்படும் என்று தெரிவித்தனர்.

    இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இன்று மாலை 4 மணிக்குள் சிவாஜியின் உடல் தேடி தராவிட்டால் மீண்டும் சாலை மறியல் செய்வோம் என்று சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

    காவிரி ஆற்றில் 9512 கன அடி தண்ணீரும், வெண்ணாற்றில் 9507 கன அடி தண்ணீரும், கொள்ளிடம் ஆற்றில் 7065 கன அடி தண்ணீரும், கல்லணை கால்வாயில் 1011 கன அடியும் என மொத்தம் 27095 கன அடி திறக்கப்படுகிறது.
    தஞ்சாவூர்:

    மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக கடந்த 19-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக கல்லணையில் கடந்த 22-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

    கல்லணையில் இருந்து தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களின் விவசாய பாசனத்துக்கு காவிரி ஆறு, வெண்ணாறு, கொள்ளிடம் ஆறு ஆகியவற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது காவிரி ஆற்றில் 9512 கன அடி தண்ணீரும், வெண்ணாற்றில் 9507 கன அடி தண்ணீரும், கொள்ளிடம் ஆற்றில் 7065 கன அடி தண்ணீரும், கல்லணை கால்வாயில் 1011 கன அடியும் என மொத்தம் 27095 கன அடி திறக்கப்படுகிறது.

    கொள்ளிடத்தில் நேற்று 6 ஆயிரம் கன அடி திறக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று முதல் கொள்ளிடத்துக்கு 7 ஆயிரம் கனஅடி திறக்கப்படுகிறது.

    கொள்ளிடத்தில் கூடுதலாக தண்ணீர் திறந்தால் கடலுக்கு வீணாக செல்லும் என்று டெல்டா விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

    கல்விராயன்பேட்டையில் காவிரி ஆற்றில் கரை உடைப்பு சீர்செய்யப்பட்டதால் கல்லணை கால்வாயில் திறக்கப்படும் தண்ணீர் திறப்பு படிபடியாக அதிகரிக்கபட்டது.
    பூதலூர்:

    தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்குவது தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களாகும். இங்கு பல லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படும். கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால் விவசாயிகள் முழுமையாக சம்பா சாகுபடி செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டனர். ஏராளமான விவசாயிகள் விவசாய பணிகள் இல்லாததால் வெளியூர்களுக்கு வேலைக்கு செல்லும் அவலம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் இந்த ஆண்டு கர்நாடகாவின் நீர் பிடிப்பு பகுதியில் நல்லமழை பெய்ததை தொடர்ந்து உபரிநீர் திறந்து விடப்பட்டு மேட்டூர் அணைக்கு அதிக அளவில் தண்ணீர் வந்து அணை நிரம்பியது. இதைத்தொடர்ந்து கடந்த 19-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் கல்லணையை வந்தடைந்ததும் கடந்த 22-ந்தேதி கல்லணையில் இருந்து தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களின் விவசாய பாசனத்துக்கு காவிரி ஆறு, வெண்ணாறு, கொள்ளிடம் ஆறு ஆகியவற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. காவிரி ஆற்றுக்கு திறக்கப்படட தண்ணீர் கல்லணை கால்வாய் வழியாக மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் சென்றது.

    இந்த நிலையில் தஞ்சை அருகே கல்விராயன்பேட்டையில் காவிரி ஆற்றில் கரை உடைந்து வயல்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் கல்லணை ஆற்றில் தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டு உடைப்பு சரி செய்யப்பட்டது. இதன் பின்னர் கடந்த 28-ந்தேதி கல்லணை கால்வாயில் 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று கல்லணையில் 760 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

    கல்லணையில் படிபடியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டதால் குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பம்பு செட் தண்ணீரை பாசனத்தை கைவிட்டு கால்வாயில் வரும் தண்ணீர் கொண்டு பாசனம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தற்போது காவிரி ஆற்றில் 9200 கன அடி தண்ணீரும், வெண்ணாற்றில் 9200 கன அடி தண்ணீரும், கொள்ளிடம் ஆற்றில் 6000 கன அடி தண்ணீரும் திறக்கப்படுகிறது.

    கொள்ளிடத்தில் நேற்று 10,287 கன அடி திறக்கப்படடது. கடலுக்கு வீணாக செல்வதாக விவசாயிகள் புகார் செய்தனர். இதனால் தற்போது கொள்ளிடத்துக்கு 6 ஆயிரம் கனஅடி மட்டுமே திறக்கப்படுகிறது.

    வருகிற ஆகஸ்டு 15-ந்தேதிக்கு மேல் விவசாயிகள் சம்பா சாகுபடிக்கு நாற்றங்கால் அமைக்கும் பணியில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    கல்லணை கால்வாய் கரையில் உடைப்பு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான வயல்களில் வெள்ளம் சூழ்ந்ததால் கல்லணை கால்வாயில் தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
    பூதலூர்:

    கல்விராயன் பேட்டை கிராமத்தில் கல்லணை கால்வாய் கரையில் உடைப்பால் ஆயிரக்கணக்கான வயல்களில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் கல்லணை கால்வாயில் தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை நிலவரப்படி கல்லணை கால்வாய்க்கு 29,115 கன அடி வினாடிக்கு தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இதில் காவிரிக்கு 9029 கன அடியும், வெண்ணாற்றில் 9016 கன அடியும், கொள்ளிடத்தில் 8030 கன அடியும் திறந்து விடப்படுகிறது. கல்லணை கால்வாயில் தண்ணீர் திறப்பு இல்லை.

    கல்விராயன்பேட்டை கிராமத்தில் கல்லணை கால்வாய் தென்கரையில் உடைப்பு ஏற்பட்டதால் அதனை சரிசெய்யும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. #Kallanai
    பூதலூர்:

    தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து டெல்டா மாவட்ட பாசனத்துக்கு கடந்த 19-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

    இதையடுத்து கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆறுகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் தற்போது கடைமடை பகுதி வரை சென்று விட்டது.



    இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் சம்பா சாகுபடி பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இந்த நிலையில் கல்லணை கால்வாய் கரையில் நேற்று காலை திடீரென உடைப்பு ஏற்பட்டது.

    தஞ்சை மாவட்டம் ஆலக்குடியை அடுத்த கல்விராயன்பேட்டை கிராமத்தில் கல்லணை கால்வாய் தென்கரையில் உடைப்பு ஏற்பட்டது. தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் உடைப்பில் இருந்து வெளியேறிய தண்ணீர் அருகே இருந்த வயல்களில் பாய்ந்தது. இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் இருந்த வயல்களில் தண்ணீர் கடல் போல் தேங்கியது.

    இதைபார்த்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே டிப்பர் லாரிகள் மூலம் மண்ணை கொட்டி உடைப்பை சரிசெய்ய முயன்றனர். ஆனால் தண்ணீரின் வேகம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருந்ததால் உடைப்பை சரி செய்ய முடியவில்லை.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் பொதுப் பணித்துறை அதிகாரிகள் செந்தில் குமரன், ரவிச்சந்திரன், முருகேசன், சண்முகவேல், ஆகியோர் விரைந்து வந்து கரை உடைப்பு ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டனர்.

    இதற்கிடையே தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் கல்லணை கால்வாயில் இருந்து தண்ணீர் திறப்பு நேற்று மதியம் முதல் நிறுத்தப்பட்டது.

    இதையடுத்து தண்ணீர் வரத்து பாதிக்கும் மேல் குறைந்ததால் கரை உடைப்பை அடைக்கும் பணி மீண்டும் முழுவீச்சில் நடந்தது.

    இந்த நிலையில் தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், வல்லம் டி.எஸ்.பி. ஜெயசந்திரன் மற்றும் பொதுப் பணித்துறை அதிகாரிகள் இரவு முழுவதும் அங்கேயே முகாமிட்டு பணிகளை துரிதப்படுத்தினர்.

    மேலும் அமைச்சர் துரைக்கண்ணு சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார்.

    அப்போது அமைச்சர் துரைக்கண்ணு கூறும் போது, ‘கல்விராயன் பேட்டை கல்லணை கால்வாய் கரை உடைப்பை சரிசெய்யும் பணி துரிதமாக நடந்து வருகிறது. இதற்காக கல்லணை கால்வாயில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு விட்டது. இன்று மாலைக்குள் உடைப்பு சரிசெய்யப்பட்டு விடும்’. மேலும் மீண்டும் தண்ணீர் திறப்பது பற்றி பொதுப்பணி துறை அதிகாரிகள் முடிவு செய்வார்கள்’ என்றார்.

    நேற்று இரவு முதல் விடிய விடிய கரை உடைப்பு பணி மும்முரமாக நடந்தது. சுமார் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளுடன், தஞ்சை தீயணைப்பு நிலைய வீரர்களும் பணியில் ஈடுபட்டனர்.

    கரை உடைப்பு அருகே சவுக்கு கட்டைகளை கட்டி அதன் அருகில் மணல் மூட்டைகள் அடுக்கி உடைப்பு சரிசெய்யும் பணி விடிய விடிய நடந்தது. இன்று காலையிலும் தொடர்ந்து நடந்தது.

    இதற்காக 10-க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் , டிராக்டர்கள், பொக்லைன் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.

    பொதுப்பணித்துறை அதிகாரிகள் அந்த பகுதியிலேயே முகாமிட்டு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர். #Kallanai
    ×